Webdunia - Bharat's app for daily news and videos

Install App

190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்: கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:23 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 190 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன
 
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் மட்டுமே இருக்கும் நிலையில் திமுக அதில் 190 இடங்களில் போட்டியிட்டு விட்டால் மீதம் இருக்கும் 44 தொகுதிகள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது 
 
இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் குறைந்தது 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் மீதி உள்ள 24 தொகுதிகளை எப்படி மற்ற கட்சிகளுக்கு பகிர முடியும் என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது 
 
காங்கிரஸ் கட்சியை 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு வந்தாலும் அந்த கட்சிக்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக முதல்கட்ட தகவல் வெளிவந்திருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அதிகபட்சமாக 18 அல்லது 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மீதி உள்ள 24 தொகுதிகளை வைத்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி,  சிபிஐ, சிபிஎம், கொங்கு மக்கள் கட்சி, பார்வார்ட் பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு எப்படி பகிர்வது என்ற பிரச்சனை தான் தற்போது எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் சில மாற்று அணிக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments