Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசாவும் இல்ல, கனிமொழியும் இல்ல! – டி.ஆர்.பாலுவுக்கு வாய்ப்பு!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (10:02 IST)
திமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கட்சி பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. முன்னதாக திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக பேசிக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் பொருளாளர் பதவியை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா, கனிமொழி, ஏ.வ.வேலு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரில் யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என பேச்சு நிலவியது. இந்நிலையில் தற்போது கனிமொழியும், ஆ.ராசாவும் தாங்கள் பொருளாளர் பதவிக்கு போட்டியிட திட்டமிடவில்லை என்றும், அதற்காக விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் திமுக பொருளாளராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments