Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (12:53 IST)
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.


 


இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.
 
இதைத் தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார்.
 
மேலும், "தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல.
 
வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பபாக இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments