Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் டோக்கனை அதிமுகக்காரங்க ஏன் தறாங்க?! – கோர்ட்டுக்கு சென்ற திமுக!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (11:44 IST)
தமிழக அரசின் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அதிமுகவினர் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பணமும், கரும்பு, வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பையும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனவரியில் வர உள்ள பொங்கலுக்கு தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொங்கல் டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அந்தந்த நியாயவிலைக்கடை ஊழியர்களே மக்களிடம் வழங்க வேண்டும். ஆனால் பல பகுதிகளில் அதிமுகவினர் இந்த டோக்கனை வழங்கி வருகின்றனர் என குற்றம்சாட்டி, பொங்கல் டோக்கனை அதிமுகவினர் வழங்க தடை விதிக்க வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments