Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி சரமாரி கேள்வி

தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி சரமாரி கேள்வி

தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி சரமாரி கேள்வி
, ஞாயிறு, 12 ஜூன் 2016 (20:03 IST)
குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவதா?  என தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு?
 
எத்தனை முறை கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் தரப்பட்டன? அதன் கதி என்ன? இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா?
 
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான துhய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை! முறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும்! பல இலட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா?
 
மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்எல்ஏ-கள் 8 பேர் சஸ்பெண்ட்