Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசாமல் இருக்கும் கருணாநிதி: காரணம் என்ன?

பேசாமல் இருக்கும் கருணாநிதி: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (09:06 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என கூறப்பட்டது. இதனையடுத்து அவருடைய உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அது உடைந்து தண்ணீராய் வடிவதாகவும் செய்திகள் வந்தன.
 
இதற்கு வீட்டிலே வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி கடந்த நாட்களாக யாரிடமும் பேசாமல் இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. அவர் வருத்தத்தில், கோபத்தில், ஏதோ பிடிவாதத்தில் பேசாமல் இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது.
 
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சொன்ன பிறகு தான் தெரியவந்தது, அவருக்கு சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் பேசாமல் இருக்கிறார். அப்பல்லோவில் இருந்து நரம்பியல் துறை மருத்துவர்களும் வந்து அவரை பரிசோதித்துள்ளார்கள். அதன் பின்னரே அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்தலாம் என அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என பேசப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணம் பெற்று விரைவில் கட்சி பணிகளை காவனிக்க எமது வாழ்த்துக்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments