Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவியா? – தொடரும் ஆதரவு குரல்கள்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (14:40 IST)
சேப்பாக்கம் எம்.எல்.ஏவான உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுக பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். பின்னர் கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இயங்க தொடங்கிய அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரவையில் உதயநிதிக்கு துறை ஒதுக்கப்படலாம் என அப்போதைய சமயம் பேசிக் கொள்ளப்பட்ட நிலையில் அப்படியாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் சமீபமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் “உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். தற்போது கே.என்.நேரு ”உதயநிதிக்கு அமைச்சராக ஆவதற்கு தகுதி உள்ளது. அவர் அமைச்சர் ஆவதை நாங்களும் வரவேற்கிறோம்” என பேசியுள்ளார். இதனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments