Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஜீ எங்க தொகுதிக்கு வந்து பேசுங்க..! – பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் திமுக வேட்பாளர்கள்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (11:06 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் சிலர் பிரதமர் தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்து பதிவிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாளுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளதால் பாஜக மேலிட தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் பாஜக வேட்பாளர்களே தேர்தல் விளம்பரங்களில் பாஜக மேலிட தலைவர்கள் பெயரை தவிர்ப்பதும் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வந்து பேசுவதால் அவர்கள் மீதான மக்களின் அதிருப்தி வாக்களிக்கும்போது பிரதிபலிக்கும் என திமுக கூட்டணி நம்புகிறது.

இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் சிலர் தங்கள் தொகுதியில் உள்ள எதிர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தால் தாங்கள் வெற்றி அடைந்துவிடுவோம் என்று கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments