Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி முகம்..! தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

Senthil Velan
செவ்வாய், 4 ஜூன் 2024 (15:08 IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில்,  திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு  7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
தமிழகத்தில் 39 இடங்களில் திமுக கூட்டணியும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ: ஆந்திராவில் அரியணை ஏறியது தெலுங்கு தேசம்..! பிரதமர் மோடி வாழ்த்து..!!
 
இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால், அவர் வெற்றி  பெறுவது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அவர்  முன்னிலையில் இருந்து வருவதால் திமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments