Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா பாணியை பின்பற்றும் திமுக: ஆர்.கே.நகரில் வேட்பாளர் மாற்றம்?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (15:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து ஆர்.கே. நகரை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் திமுக அணிகளுடன் தீபாவும் களத்தில் குதிக்கிறார். இதனால் அந்த தொகுதி அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் திமுக அத்தொகுதிக்கான வேட்பாளரை முதலில் அறிவித்தது. என்.எம்.மருதுகணேஷ் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


 

 

இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதணன் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து திமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த தொகுதிக்கு புதிய வேட்பாளர் தேவையா என்றும், தினகரன், மதுசூதணன் ஆகியோருடன் போட்டியிடும் அளவிற்கு மருது கணேஷ் சரியான தேர்வுதானா என்று பேசி வருகின்றனராம்.
 
இந்த சூழ்நிலையில் திமுகவில் வேட்பாளர் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. பெரும்பாலும் அதிமுகவில்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின் திடீரென மாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments