கொரோனா எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (09:11 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தடுக்க முடக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிட்டுள்ளதால் பட வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி திமுக-வின் கட்சி பொது செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் நடைபெற இருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் அமலில் இருப்பதால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சிகள், கூட்டங்களையும் ஒத்தி வைக்க மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தி வையுங்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி கடிதம்..!

கேரள ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கர தீ விபத்து.. 500 பைக்குகள் சாம்பல்..!

திமுக எதிரி.. ஆனா கனிமொழி எனக்கு ஃபிரண்ட்!.. வாழ்த்து சொன்ன விஜய்...

சிறுத்தை தாக்க வந்த பயத்தில் கிணற்றில் விழுந்த விவசாயி.. சிறுத்தையும் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு..!

அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்.. அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments