Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமக்கல்லில் ஆளுனர் திடீர் ஆய்வு: கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (07:33 IST)
தமிழக ஆளுனராக சமீபத்தில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் ஆளுனர் ஆய்வு செய்வது என்பது முறையற்ற செயல் என்று கூறி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளுனரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் அதிமுக அரசு இதுகுறித்து எந்தவித எதிர்ப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை
 
இந்த நேற்று திடீரென நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். ஆளுனரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியதாக 192 திமுகவினர் கைது செய்யப்பட்டு அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
முன்னதாக நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வு செய்தார் என்பதும் அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் சில விளக்கங்களை கேட்டு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆளுனர் ஆய்வு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியபோது, 'நாமக்கல்லில் மக்கள் நலனுக்காகத்தான் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை' என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments