Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தி தொலைக்காட்சியை திமுகவினர் புறக்கணிப்பு : கருணாநிதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (19:27 IST)
நடுநிலை என்ற பெயரில் அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி இனிமேல் தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில், திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்கட்சியாக இருக்கும் போதும் ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினர் வாடிக்கையாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், தற்போது  “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள  “தந்தி தொலைக்காட்சி ”, ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாகவும் - தி.மு.கழகத்திற்கு எதிராகவும் தொடர்ந்து, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
 
குறிப்பாக, பல்வேறு  “விவாதங்கள்” என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக் கொண்டு, உண்மைக்கு மாறாக, திமுக தரப்பில் பதில் அளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல், ஆளும் அதிமுக-வுக்கு பிரச்சாரம் செய்து வருவதால், திமுக தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments