Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்து: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் படுகாயம்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (20:31 IST)
தமிழகத்தில் வேலூர் தவிர மீதியுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அவற்றுடன் 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. 
 
நேற்றுடன் பிரச்சாரம் முடிந்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் இன்று ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் என்பவர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். 
 
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் தனது மனைவியுடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் நல்லிபாளையம் அருகே  விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் சின்ராஜ்  மற்றும் அவரது மனைவி இருவரும் காயம் அடைந்தனர்.  விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments