Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா (வீடியோ இணைப்பு)

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா (வீடியோ இணைப்பு)
, புதன், 27 ஏப்ரல் 2016 (15:12 IST)
பெரம்பலூர் மாவட்டம் புது வேட்டக்குடியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொண்டர் ஒருவரை தாக்கினார்.


 
 
பொதுவாக ஊடகங்களின் முன்னிலையில் தொண்டர்களை அடிப்பது கோபப்படுவது போன்ற செயல்களில் பிரபலமானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் திமுகவில் ஒரு விஜயகாந்தை போல் ஆ.ராசா செயல்பட்டுள்ளார்.
 
புது வேட்டக்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் தாமதமாக தொடங்கியதால் குவிந்திருந்த தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

நன்றி: ராஜன் நெல்லை, பாலிமர் தொலைக்காட்சி
 
இந்நிலையில் கூட்டத்தினரிடையே பேசிக்கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திடீரென டென்ஷனாகி இடையூறு ஏற்படுத்திய தொண்டரை நாக்கை மடக்கி கொண்டு அடிக்க பாய்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறு கட்சிகளும் ஏறுமுகத்தை நோக்கி செல்கின்றன - ஜி.கே.வாசன்