Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (14:27 IST)
ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்  என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 27ம் தேதி மனுவை திரும்ப பெறும் நாள் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 
அதிமுக வரும் 15-ஆம் தேதி உயர்மட்டக் குழு கூடி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. திமுகவும் ஆர்.கே  நகர் தொகுதிக்கான விருப்ப மனுவை கொடுக்க துவங்கியுள்ளது. மதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக  அறிவித்துள்ள நிலையில், மக்கள் நலக்கூட்டணி தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் ஆர்.கே நகர் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின்  வேட்பாளராக வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற எந்த கட்சியும் தங்களது வேட்பாளரை அறிவிக்காத நிலையில், தேமுதிக முதலில் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இதனால் ஆர்.கே நகர்  இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments