நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

Mahendran
சனி, 21 செப்டம்பர் 2024 (10:50 IST)
விஜயகாந்த் வீட்டின் முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் கூச்சலிடுவதால், அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். 
 
சென்னை விருகம்பாக்கம் கண்ணம்மாள் தெருவில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் வீடு உள்ளது. 2005 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவரானது முதல், அவரது வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், கடந்த மாதம் விஜயகாந்த் வீட்டிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க கோரி, தேமுதிக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். 
 
இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கூச்சல் இடுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும், எனவே மீண்டும் விஜயகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments