Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக விற்கு 4 தொகுதி – உறுதியானதா அதிமுக கூட்டணி ?

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (12:59 IST)
தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு அதிமுக கூட்டணியி 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் எந்தக் கட்சிகள் எங்கு போட்டியிடும் என்ற விவரம் இரண்டுக் கட்சிகளாலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வந்தது.

தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தேமுதிக 7+1 சீட்கள். தங்களை விடப் பலம் குறைந்த கட்சியாகவும் குறிப்பிட்ட ஒரு சாதியினரின் வாக்குகளை மட்டுமேக் கையில் வைத்திருக்கும் கட்சியான பாமக வை விட தங்களால் கம்மியான சீட்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிடித்த பிடியில் நின்றது.

ஆனால் திமுக கூட்டணியும் இறுதியாகி விட்டதால் தேமுதிக விற்கு வேறு வழியில்லாமல் அதிமுக அணியிலெயே இணைய வேண்டிய நெருக்கடி உருவானது. அதனால் இப்போது 4 சீட்டுகளுக்கு தேமுதிக பணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று மாலை நடக்கவுள்ள கூட்டணிக் கட்சிகளுடனான மாநாட்டில் தேமுதிக கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

திமுக நடத்தி வந்த நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments