Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனைவில் அனுமதி!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:09 IST)
சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

கலந்துகொண்டாலும், அவர் அந்த நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம்சாட்டினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “அவரை எப்படி பார்த்துக் கொள்வது என எங்களுக்கு தெரியும்” என தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா காட்டமாக பதிலளித்தார்.

இந்நிலையில் இப்போது விஜயகாந்த் மீண்டும் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக கட்சி சார்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ‘தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments