Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கூட்டணியா வேணாம்.. சோலாவாக களமிறங்குவோம்! – தேமுதிக அதிரடி முடிவு?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:30 IST)
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுதாய் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் ஏறத்தாழ கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து விலகியது. அதை தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது..

ஆனால் அதற்குள்ளாக தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அமமுக – தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதிலும் சரியான உடன்பாடு ஏற்படாததாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக தொகுதி வாரியாக வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசனை செய்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments