Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி சென்ற தேமுதிக குழு, கிலியில் திமுக: பரபரப்பு அரசியல் சூழ்நிலை

டெல்லி சென்ற தேமுதிக குழு, கிலியில் திமுக: பரபரப்பு அரசியல் சூழ்நிலை

டெல்லி சென்ற தேமுதிக குழு, கிலியில் திமுக: பரபரப்பு அரசியல் சூழ்நிலை
, திங்கள், 7 மார்ச் 2016 (13:44 IST)
தேமுதிக என்னும் ஜவ்வு மிட்டாயை, திமுக ஒருபக்கம், பாஜக ஒரு பக்கம், மக்கள் நல கூட்டணி ஒரு பக்கம் மாற்றி மாற்றி இழுத்து வந்தாலும், யாருக்கும் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது தேமுதிக.


 
 
திமுகவுடனான கூட்டணி குறித்து நாளுக்கு நாள் ஒவ்வொரு ஊகச்செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிப்பு வெளியிடாமல் வேடிக்கை பார்க்கிறார் விஜயகாந்த்.
 
விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க இந்த கட்சிகள் படாத பாடுபடுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி விஜயகாந்தும் அமைதி காத்து நாளுக்கு நாள் தனது டிமாண்டை அதிகப்படுத்தி வருகிறார். ஆனால் மக்கள் மத்தியில் விஜயகாந்த் இப்படி இழுத்தடித்து வருவது அவரை பற்றிய தவறான யூகங்களை ஏற்படுத்துகிறது.
 
ஏதாவது ஒரு கூட்டணியில் சேரவேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிட வேண்டும். இது தானே முடிவாக இருக்கும். விஜயகாந்தின் நிபந்தனைகளுக்கு எல்லா கட்சிகளுமே ஆமாம் போட்டு தான் வருகிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் விஜயகாந்தின் இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?.
 
திமுக கூட்டணி தரப்பில், ஸ்டாலின், கருணாநிதி, இளங்கோவன் என அழைப்பு விடுத்து வருகின்றனர். மக்கள் நல கூட்டணி சார்பில் வைகோ, திருமா., என அனைத்து தலைவர்களும் அழைப்பு விடுத்து வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் உட்பட பல நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
பாஜக-வின் தமிழக பொருப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இரண்டு முறை விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இன்னமும் கூடாணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.
 
திமுக-வுடனயே விஜயகாந்தின் கூட்டணி அமையும் என பெரும்பாலான மக்கள் ஊகித்து வரும் வேளையில். இன்று தேமுதிக தேர்தல் குழு டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக தரப்பில் இது கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்நாள் வரை தேமுதிக-வை பல கட்சிகள் கூட்டணி குறித்து சந்தித்து வந்தன, ஆனால் முதல் முறையாக தேமுதிக பாஜகவை கூட்டணி குறித்து சந்திக்க சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தேமுதிக தேர்தல் குழு டெல்லி பாஜக தலைவர்களை சந்திக்கும் போது தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முக்கிய பிரமுகர்கள் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil