Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிசையாக நடையைக் கட்டும் தேமுதிக நிர்வாகிகள் – காலியாகும் கூடாரம் !

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (20:49 IST)
தேமுதிகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

ஒருக்காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. கடந்த சட்டம்னற தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்து தனது அரசியல் வாழ்வின் மோசமானக் காலகட்டத்தில் உள்ளது. இதற்குக் கட்சி விஜயகாந்தின் அதிகாரத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் மைத்துனரின் அதிகாரத்துக்கு வந்ததும் ஒருக் காரணமாக சொல்லப்படுகிறது.

இதனால் கட்சிக்குள்ளாகவே பலரும் அதிருப்தி நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் பாஜக வோடுக் கூட்டணி வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இதனால் சில மாவட்ட நிர்வாகிகள் அந்தக் கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தேமுதிக வில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். வரிசையாக தேமுதிக கூடாரம் காலியாகி வருவதால் அக்கட்சி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments