அடம்பிடிக்கும் தேமுதிக ! வர்றீங்களா... இல்லையா... கெடு விதித்த அதிமுக, திமுக..

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:09 IST)
கூட்டணியில் இணைந்த தொடர்பாக தேமுதிக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கெடு விதித்துள்ளன. 


 
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. 
 
அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு ஐந்து தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக , விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இதேபோல் அதிமுக தேமுதிகவுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமாவுக்கு கொடுத்ததுபோல் தங்களுக்கும் வழங்க வேண்டுமென அதிமுகவுடன் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளது. இதனை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. இதற்கிடையில் திமுகவும் விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இரு கட்சிகளுமே 4 இடங்கள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதேபோல் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் தேமுதிக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருக்கிறது. நிலையில் மார்ச் 1-ஆம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு திமுக தேமுதிகவுக்கு கெடு விதித்துள்ளது. இதேபோல் அதிமுகவும் மார்ச் 5ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே இன்றைக்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments