தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

Mahendran
புதன், 15 அக்டோபர் 2025 (17:42 IST)
வரும் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை ஒட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாட்களுடன் சேர்த்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மது விற்பனை சூடுபிடிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால், தீபாவளி பண்டிகை காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து மாவட்டக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்களை இருப்பு வைக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், தொடர் விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையால் இந்த மூன்று நாட்களிலும் மதுபானங்களுக்கான தேவை அதிகரிக்கும். குறிப்பாக, அதிகமாக விற்பனையாகும் 5 முதல் 7 பீர் வகைகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனையாகும் நிலையில், வார இறுதி நாட்களில் 30% முதல் 40% வரை விற்பனை அதிகரிக்கும். கடந்த 2023 தீபாவளிக்கு 3 நாட்களில் ரூ.460 கோடியும், 2024-ல் 2 நாட்களில் ரூ.438 கோடியும் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் என டாஸ்மாக் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments