Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு எத்தனை நாட்கள் அரசு பொது விடுமுறை.? முதல்வருக்கு பறந்த முக்கிய தகவல்..!

Mahendran
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (16:30 IST)
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. அன்றைய தினம் வியாழன் என்பதால், அன்று ஒரே நாள் மட்டும் அரசு விடுமுறையாக இருக்கும். இந்த நிலையில், வெள்ளி, அன்று விடுமுறை கேட்டு பெற்று தான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி தினத்துக்கும் சனி, ஞாயிறு விடுமுறைக்கும் இடையில் வெள்ளிக்கிழமை ஒரு வேலை நாள் என்பதால், அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்லும் அரசு ஊழியர்களின் வசதிக்காக நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அறிவித்தால், 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால், குடும்பத்துடன் தீபாவளியை தங்கி கொண்டாடுவதற்கு வசதியாக இந்த விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments