Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: வில்லன் ரேஞ்சுக்கு மிரட்டல் விடும் திவாகரன்!

பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது: வில்லன் ரேஞ்சுக்கு மிரட்டல் விடும் திவாகரன்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:56 IST)
சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த அதிமுகவும் ஒன்று திரண்டுள்ள நிலையில் ஒரு சில ஆதரவாளர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தொண்டர்களும் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என வாய் கூசாமல் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் தினகரனும் அவரது ஆதரவாளர்களும். இந்த வரிசையில் தற்போது திவாகரனும் இணைந்துள்ளார்.


 
 
அதிமுக தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்பதை உணர்ந்த சசிகலா குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் அதிமுகவை கொண்டு வர தீவிரமாக களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று மாலை மதுரை வேலூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தை தனக்கு சாதகமாக மாற்ற தீவிரமாக உள்ளார் தினகரன்.
 
பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை சசிகலாவின் தம்பி திவாகரன் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது உள்ள அரசு தங்களை பகைத்துக்கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என சினிமா பட வில்லான் ரேஞ்சுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
 
அதிமுக பிரியவில்லை ஒரே அணியாகதான் உள்ளோம். அடிமட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் நம்பி தான் அதிமுக உள்ளது. அமைச்சர்களை நம்பி இல்லை. தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கம்தான் உள்ளனர். எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என்றார் திவாகரன். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத திவாகரன் அதிமுக தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments