சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (17:57 IST)
சிவகாசியில் அமைந்துள்ள பாரம்பரியமான விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. கடந்த பத்து நாட்களாக, விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் பக்தர்களை கவரும் பல்வேறு வாகனங்களில்  ரிஷபம், குதிரை, காமதேனு உள்ளிட்டவையில் ரத வீதிகளில் எழுந்தருளி திருவிழாவை மகிழ்ச்சியுடன் நடத்தினர்.
 
இன்று காலை, விழாவின் முக்கிய நிகழ்வாகிய திருத்தேரோட்டம் துவங்கப்பட்டது. தேர் நகரும் போதே, அறநிலையத்துறை கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள், தேரை கோவில் முன்பே நிறுத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால், தேர் இடைநிலையாக கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையால் சமாதானம் ஏற்பட்டது. அதிகாரிகள் தற்காலிகமாக கோவில் முன்பே தேரை நிறுத்த ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மக்கள் அமைதியாக பின்வாங்கினர்.
 
இந்த நிகழ்வுக்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments