Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது விபரீதம்! மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

Prasanth Karthick
திங்கள், 2 செப்டம்பர் 2024 (09:22 IST)

சேலத்தில் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவருடைய மனைவி ராதா. நேற்று காலை ராதா தனது செல்போனை வழக்கம் போல சார்ஜ் போட்டுள்ளார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

 

உடனடியாக ராதாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராதாவை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. ராதாவின் இழப்பால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராதாவுக்கு மின்சாரம் தாக்கியது செல்போன் சார்ஜர் மூலமாகவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கோடைகால தண்ணீர் பந்தல்.. தொண்டர்களுக்கு தவெக அன்பு உத்தரவு.!

பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!

மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, புத்தக வாசிப்பு மண்டலம்..Etc! - சென்னை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

புத்தகங்கள் முறைகேடாக விற்பனை.. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அதிகாரி டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments