Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் தடுப்பு வாரிய அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர். தீவிர விசாரணை..!

Mahendran
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (11:49 IST)
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சற்றுமுன் இயக்குனர் அமீர் ஆஜர் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் அவர் தயாரித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அமீர் அவர்களையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள போதை  பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்மனுக்கு இயக்குனர் அமீர் ஆஜராக நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று காலை அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படும் முடிவு குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments