Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவாலயத்தில் மீட்டிங் போட்ட ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்!!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (09:53 IST)
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். 
 
தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்துள்ளார். இவர் சமீபத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான் என்றும் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். 
 
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் சில காங். பிரநிதிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments