Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோறுதான் சாப்பிடுறாங்களா இல்ல... தினகரன் அண்ட் கோ-வை வெளுத்து வாங்கிய திண்டுக்கல் சீனிவாசன்!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (20:28 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏக்களும் பெற்றுக்கொண்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 
 
இதோடு நிறுத்தாமல், தினகரன் மற்றும் அவரது அணியில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, தினகரன் யார், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு துரோகி. அந்த துரோகியுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்ட 18 பேரும் மனு கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் சோறுதான் சாப்பிடுகின்றனரா. வேறு ஏதாவது சாப்பிடுகின்றனரா? 
 
ஜெயலலிதாவைவிட மாபெரும் தலைவரிடம் போயிருந்தால் எங்களுக்கு பெருமை. ஆனால் ஜெயலலிதாவால் கேடி, ரவுடி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரனுடன் 18 பேரும் சேர்ந்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். 
 
இந்த 18 பேரும் ஏதோ தியாகம் செய்தது போலவும், இவர்களால்தான் கட்சியே நடப்பதும் போலவும் ஆளுநரிடம் சென்று மனு கொடுக்கிறார்கள் என அரசியலில் ஆண்மை இருந்தால் வழக்கு போடுங்கள். வெற்றி பெற்றால் நீங்கள் வாங்க, தோல்வி அடைந்தால் நாங்கள் போகிறோம் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments