Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய்க்கு வாங்கி 60 ரூபாய்க்கு தக்காளி விற்கும் வியாபாரி.. பொது சேவை என தகவல்..!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
100 ரூபாய்க்கு தக்காளி வாங்கி 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருவதாகவும் இதை ஒரு பொது சேவையாக செய்து வருவதாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
தக்காளி விலை தற்போது  120 என விற்பனை ஆகி வருகிறது என்பதும் பொதுமக்கள் ஓரளவு தக்காளி விலை இறங்கி இருந்தாலும் இன்னும் அதிருப்தியில் தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் பெங்களூரில் இருந்து எட்டு டன் தக்காளியை 100 ரூபாய்க்கு வாங்கி வந்து அதை பொதுமக்களுக்கு 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். 
 
ஒரு கிலோவுக்கு ரூ.50 தனக்கு நஷ்டம் என்றாலும் மக்கள் சந்தோஷமாக வாங்கி செல்வதை பார்க்கும் போது எனக்கு திருப்தியாக இருக்கிறது என்றும் இதை ஒரு பொது சேவையாக செய்து கொண்டிருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே இதே போல் கடந்த வாரமும் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்தேன் என்றும் இது இரண்டாவது முறை என்றும் தெரிவித்துள்ளார். அவர் விற்பனை செய்து வரும் 60 ரூபாய் தற்காலியை பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது+
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments