திண்டுக்கல் மாவட்டத்தில் செபஸ்தியார் திருவிழாவில் 2000 கோழி, 800 ஆடுகளுடன் விடிய விடிய அன்னதான விருந்து நடைப்பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியில் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய செபஸ்தியர் திருவிழா, பாதிரியார் சேவியர் ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நேற்று காலை 8.00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. இதற்கு 2000 கோழி, 800 ஆடுகள், 130 அரிசி மூட்டையை அனைத்து மதத்தினரும் காணிக்கையாக வழங்கினர்.
செபஸ்தியர் ஆலயத்தில் மாலை 6.00 மணி அளவில் தொடங்கிய அன்னதான விருந்து விடிய விடிய நடைப்பெற்றது. விருந்தில் காணிக்கையாக பெற்ற ஆடு, கோழி ஆகியவை இடம்பெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்திலே பெரிய அளவில் நடைப்பெற்ற அசைவ விருந்து என்பதால் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.