Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: எம்ஜிஆர் குறித்த சர்ச்சை கருத்தால் நெருக்கடி!

திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: எம்ஜிஆர் குறித்த சர்ச்சை கருத்தால் நெருக்கடி!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (10:31 IST)
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியில் உள்ள பி.எச்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


 
 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுத்த வருடம் ஜனவரி வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் விழா மதுரையில் ஜூன் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. சட்டப்பேரவை நடந்து வருவதால் இரவோடு இரவாக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் இந்த விழாவுக்கு வெளிமாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்பி அவுங்கள்ள யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும் என்றார்.
 
அதாவது எம்ஜிஆரை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது எம்ஜிஆர் அவ்வளவு பிரபலமானவர் இல்லை என்கிற ரீதியில் அமைந்தது அவரது பதில். திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதிலை அருகில் நின்ற அமைச்சர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியில் உள்ள பி.எச்.பாண்டியன், பாரத ரத்னா பட்டம் பெற்ற எம்ஜிஆரை யாருக்கும் தெரியாது என்று கூறியிருப்பது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை நிறுவியவரே எம்ஜிஆர் தான்.
 
அவரது சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்தின் உள்ளே செல்ல தகுதியற்றவர். எம்ஜிஆரின் பெயருக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments