Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களத்தில் குதிக்கும் தினகரன் டீம்: 40 எம்எல்ஏக்களை அறுவடை செய்ய இலக்கு!

களத்தில் குதிக்கும் தினகரன் டீம்: 40 எம்எல்ஏக்களை அறுவடை செய்ய இலக்கு!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (09:38 IST)
ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் தினகரன் அணிக்கும் உச்சக்கட்ட மோதல் ஆரம்பித்துள்ளது. சிறைக்கு செல்லும் முன்னர் தினகரனை ஒதுக்கி வைத்த அதிமுக அமைச்சர்கள், அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்னரும் கட்சி பணியாற்ற அனுமதிக்கவில்லை.


 
 
தினகரனை ஒதுக்கி வைத்ததாக அறிவித்த முடிவு அப்படியே தொடர்கிறது. அவரும் ஒதுங்கியே இருப்பது நல்லது என அதிமுக அமைச்சர்கள் நேற்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதனையடுத்து தினகரன் அணி அமைச்சர்கள் மீதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
 
இந்நிலையில் நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்த பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இன்னும் இரண்டு மாதங்கள் ஒதுங்கியிருப்பேன். அதன் பின்னர் எனது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என்றார். ஆனால் இந்த இரண்டு மாத கால அவகாசம் என்பது தங்கள் அணிக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட கால அவசகாசம் என தகவல் வருகிறது.
 
அதாவது இன்னும் இரண்டு மாத காலத்தில் தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்களை திரட்ட தினகரன் தனது அணிக்கு உத்தரவிட்டுள்ளாராம். இதனையடுத்து தினகரன் அணி களத்தில் தற்போது அதிரடியாக குதித்துள்ளதாம். அவர்களுடைய பணி எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து தினகரனுக்கு ஆதரவாக மாற்றுவது தான்.
 
குறிப்பாக தினகரன் அணியின் டார்கெட்டாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள தலித் எம்எல்ஏக்கள். அவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களை வளைக்க மெகா திட்டத்தை தயார் செய்து வருகின்றனர் தற்போது தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்கள்.
 
இப்படி இந்த இரண்டு மாத காலத்திற்குள் 40 எம்எல்ஏக்களை தினகரனுக்கு ஆதரவாக மாற்றி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்துள்ளது தினகரன் அணி என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments