Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் வசமாக சிக்கியிருக்கிறார்: அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே வர முடியாதாம்!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (09:09 IST)
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் டிடிவி தினகரன். அவருடன் சேர்ந்து அவரது நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருடன் இன்று சென்னை வருகின்றனர் டெல்லி போலீசார் விசாரணை நடத்த.


 


தினகரன் உடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மல்லிகார்ஜுனா தான் இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்து பெற இந்த இடைத்தரகரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மல்லிகார்ஜுனா வேறு யாரும் இல்லையாம் தினகரன் கூடவே இருக்கும் மல்லி என்னும் மல்லிகார்ஜுனா. இவர் தினகரனுக்கு வலது கரமாக, எல்லாமாக இருந்தவர். இவர் மூலம் தான் தினகரனின் அனைத்து பணப்பரிமாற்றமும் நடைபெறுமாம்.

இந்த மல்லி என்னும் மல்லிகார்ஜுனாவை அதிமுகவின் இரு அணிகளில் உள்ள தலைவர்களுக்கும் நன்கும் தெரியும். தினகரனின் நீண்ட கால நண்பராக இருக்கும் மல்லி அதிகம் செல்வாக்கு பெற்ற நபராக பார்க்கப்படுகிறது. தினகரனை பற்றிய பல்வேறு ரகசியங்கள் மல்லிக்கு தெரியும் என்பதால் இந்த வழக்கில் இருந்து தினகரன் வெளி வருவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments