Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:26 IST)
அமமுகவை சீண்டிய அமைச்சர் ஜெயகுமாரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கிண்டலடித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அமமுக-வை சீண்டுவது உயர் அழுத்த மின்சாரத்தை சீண்டுவது போன்றது எனக் கூறியிருந்தார். இவரது கருத்திற்கு எதிர் கர்த்து பதிவிட்ட ஜெயக்குமார் ‘ அதிமுக சீராக இயங்கும் 230 வோல்ட், டிடிவி யாருக்கும் பயன்படாத ஹை வோல்ட். மேலும் தினகரன் தானே அவர் பயங்கரமானவர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.
 
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மின்சாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஜெயகுமார் என்னைப் பயங்கரமானவர் என கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயகுமாருக்கு மண்டைக்கு மேல் ஒன்றும் இல்லாததைப் போல மண்டைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை போலும். அதனால் தான் இப்படி பினாத்திக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments