Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-பாஜக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: மு.க.ஸ்டாலின் விளக்கம்

திமுக-பாஜக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: மு.க.ஸ்டாலின் விளக்கம்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (23:46 IST)
பாஜகவுடன் தேர்தல் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை    நடைபெறவில்லை என  மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் பாஜக இணைந்து சந்திக்கப்போவதாக வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை. திமுக மற்றும் பாஜக இடையே எந்த ரகசிய பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
 
ஆனால், திமுகவை தீண்டத் தகாத கட்சி என்று கூறி வந்த பாஜக எங்களைத் தற்போது தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
 
சென்னை வருகை தந்துள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், திமுக பொருளாளர் வீட்டுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்று சந்தித்த காரணத்தினால் திமுக-பாஜக இடையே கூட்டணி மலரும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments