Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. மர்ம மரணம் குறித்து எந்த நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் கௌதமி?: வெளிச்சம் போட்டு காட்டிய இளைஞர்!

ஜெ. மர்ம மரணம் குறித்து எந்த நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் கௌதமி?: வெளிச்சம் போட்டு காட்டிய இளைஞர்!

ஜெ. மர்ம மரணம் குறித்து எந்த நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் கௌதமி?: வெளிச்சம் போட்டு காட்டிய இளைஞர்!
, வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (16:24 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் உயிரிழந்தார்.


 
 
இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது புகைப்படத்தை வெளியிடவும், அவர் பேசும் ஆடியோ வெளியிடவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவரை சந்திக்க வந்த ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது மரணத்தில் பலரும் சந்தேகங்களை எழுப்பினர்.
 
இதனையடுத்து நடிகை கௌதமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதால் அதனை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தார். கடிதத்துக்கு பதில் வரவில்லை என்று மீண்டும் நினைவூட்டல் கடிதமும் எழுதியாக கூறியிருந்தார்.
 
அதன் நகலும் கொடுக்கப்பட்டது அனைத்து ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டது. இந்நிலையில் தீபக் என்ற இளைஞர் உண்மையில் கௌதமி கடிதம் அனுப்பினாரா என்பதை தெரிந்துகொள்ள கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் நடிகை கௌதமி அனுப்பிய கடித நகல் கோரி மனு செய்யப்பட்டது.

 

 
 
இதற்கு கடந்த ஜனவரி 27-ஆம் தேதியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் கௌதமி பொய் கூறினாரா அல்லது தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பினாரா, எந்த நாட்டு பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த தகவலை பெற்ற தீபக் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவுக்கடியில் புதிய கண்டம் ஆய்வாளர்கள் உறுதி!!