Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வால் விரட்டப்பட்ட தினகரன் கையில் அதிமுக...

ஜெ.வால் விரட்டப்பட்ட தினகரன் கையில் அதிமுக...
, வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:08 IST)
அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெ.வின் தோழி சசிகலாவின் வலது கரமாக, அவரின் சகோதரி வனிதாமணியின் மகன் டிடிவி.தினகரன் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ. மறைந்து விட்ட நிலையில் சசிகலாவின் வலது கரமாக இருந்த அவரின் தம்பி திவாகரனை ஒதுக்கி விட்டு, அவரது இடத்தை தினகரன் கைப்பற்றியுள்ளதாக அதிமுக கட்சி வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
 
ஜெ. வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதில் சசிகலா தயக்கம் காட்டிய நிலையில், திவாகரனும், தினகரனும் அந்த பதவிக்கு குறிவைத்துள்ளார்கள். ஆனால், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை ஆதரித்துள்ளனர். 
 
எனவே திவாகரன் ஒதுங்கி விட்ட நிலையில், சசிகலாவை அந்த பதவியில் அமரவைக்க தினகரன் மும்முரமாக வேலை பார்த்துள்ளார். சசிகலாவின் தலைமையை விரும்பாத அதிமுக நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார் தினகரன்.
 
இதனால், தற்போது அதிமுக வட்டாரத்தில் அவரின் கையே ஓங்கியுள்ளதாம்.  அவருக்கு கிடைக்கும் அதிமுகவினரின் ஒத்துழைப்பு, திவாகரனுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், தினகரனோடு, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷும் கை கோர்த்து செயல்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
 
என்னதான் சசிகலா பொதுச்செயலாளாரக இருந்தாலும், இனி இவர்களின் கையில்தான் அதிமுக எனவும், கட்சியை அவர்கள்தான் வழிநடத்துவார்கள் எனவும் அதிமுக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரானவுடன் சசிகலாவின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடல்: பன்னீருக்கு குட் பை!