Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்!

காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (08:56 IST)
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.


 
 
அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமியும் தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளது திமுக.
 
திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுகவில் இல்லை என்பதை நினைக்கும்போது, கவலையாக உள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய அவர் கடைசியில் காசு பணம் துட்டு மணி மணி என குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு எனவும் மு.க.அழகிரி பற்றி கேட்ட கேள்விக்கு கழகத்தில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டாம் என கூறியது அழகிரி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படது. இந்த பேட்டி நேற்று வைரலாக பரவியது. அதற்கான எதிர்வினை தான் இந்த டுவிட்டர் பதிவோ?.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments