Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தேவா இசை நிகழ்ச்சி: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

Siva
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (08:01 IST)
பிரபல இசையமைப்பாளர் தேவா இசைக்கச்சேரி இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெற இருப்பதை அடுத்து அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
 
சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபுறம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யு டர்ன் எடுத்து, லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.
 
அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
 
அதேபோல நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வருவோர் மெட்ரோ ரெயில், மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.",
    
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments