Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை அமைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (16:29 IST)
காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
காவிரி விவாரகத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை சார்பில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறவில்லை என்று நீர்வளத்திறை செயலாளர் தெரிவித்தார்.
 
அப்போது துணை சபாநயகர் துரைமுருகன் தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் காவிரில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
காவிரி நடுவர் மன்றம் முடிவு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பு மற்றும் காவிரி நீர் முறைப்படும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments