Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு!

Prasanth Karthick
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (08:03 IST)

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிக்க போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திமுக கட்சி தலைவரும், தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் அவருக்கு எந்த அமைச்சர் பதவியும் வழங்கப்படாவிட்டாலும், பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக திமுக வட்டாரத்தில் தொடர்ந்து பேச்சுகள் நிலவி வருகிறது. சமீபத்தில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது வரும் 19ம் தேதிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என தனது கருத்தைக் கூறியிருந்தார்.
 

ALSO READ: அண்ணாமலை, எடப்பாடியாருக்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு.. செல்வார்களா?
 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடு ஈர்ப்புக்காக அமெரிக்கா செல்லும் முன்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூட்டப்படுகிறது. இதில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதுடன், வளர்ச்சி திட்டங்கள், நடப்பு மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

 

இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்த விவாதங்களும் நடைபெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவாரா? அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா? என்ற பல கேள்விகள் உள்ளதால் இந்த அமைச்சரவை கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments