Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப் விட்டு அடிங்கடா பாடி தாங்காது... நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:23 IST)
புதிதாக இன்னொரு (நாளை) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டி கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் மேலும் மழையும் மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதிதாக இன்னொரு (நாளை) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 
 
நாளை ( நவம்பர் 13 ஆம் தேதி) அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட திசையில் நகர்ந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments