Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் - பாஜவுக்கு, திமுக பதிலடி !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (15:35 IST)
தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி - கொலைகள் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் என பதிவிட்டு  அதை அகில இந்திய பிஜேபியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக்கு டேக் செய்துள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளராக பணியார்றி வந்த வில்சன் என்பவர் கடந்த 9 ஆம் தேதி  இரவு 9.45 மணியளவில் சுட்டுக்கொள்ளப்பட்டார். களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்ததில் காவலரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படங்களை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது. 2 பேரில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. 
 
இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  களியக்காவினையில் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவு ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ரூ. 1கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று, தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : 
 
’இதை விட கேவலம் வேறுண்டோ நடந்த படுகொலைக்கு சிறு கண்டனம் இல்லை, இரங்கலும் இல்லை, அவர் குடும்பத்துக்கு ஆறுதல் இல்லை, குற்றவாளிகளை கண்டிக்க மனமும் இல்லை ஆனால் இதோ சாவிலும் அரசியல் செய்ய வந்துவிட்டார் சர்வாதிகாரி பாசிச @mkstalin யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற குழப்பம் தீரவில்லையோ https://twitter.com/mkstalin/status/1215869078004350976 ‘என  ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு அதை ஸ்டாலினுக்கு டேக் செய்திருந்தார்.
 
இதற்குப் பதிலடி தரும்விதமாக  திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ’’ மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி - கொலைகள் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் @BJP4India ;அதன் அங்கமான @BJP4TamilNadu'இரங்கல் - ஆறுதல்' என்றெல்லாம் பேசுவது காலக்கொடுமை! 'பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்' ’’எனப் பதிலடி கொடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments