Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வரை எதிரொலித்த தினகரனின் நடவடிக்கை: ஆப்பு ரெடியாகிறதாம்?

டெல்லி வரை எதிரொலித்த தினகரனின் நடவடிக்கை: ஆப்பு ரெடியாகிறதாம்?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (12:22 IST)
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்ததும் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்து வரும் செயல்கள் டெல்லியை கோபமடைய வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் தினகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வரும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


 
 
அதிமுக அணிகள் இணைப்பு நடந்த போது வைத்திலிங்கம் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவார் என வைத்திலிங்கம் கூறியது தினகரன் தரப்பை ரொம்பவே உசுப்பேற்றிவிட்டது.
 
இதனையடுத்து களத்தில் தீவிரமாக இறங்கிய தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் ஆளுநருக்கு எடப்பாடி மீதான நம்பிக்கை இல்லா கடிதத்தை கொடுக்க வைத்தார். அடுத்ததாக சசிகலாவை நீக்க போவதாக சொன்ன மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து அதிரடியாக தூக்கி உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து தன்னை நீக்க தினகரனுக்கு அதிகாரமில்லை, அவரை நாங்கள் ஏற்கனவே நீக்கிவிட்டோம் என வைத்திலிங்கம் பதலடி கொடுத்தார். இதனையடுத்து தஞ்சாவூரில் வைத்திலிங்கம் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
 
தன்னை துணைப் பொதுச்செயலாளர் என நினைத்துக்கொண்டு தான் தினகரன் இவ்வளவு ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார் எனவே விரைவில் தேர்தல் ஆணையம் மூலம் இதற்கு முடிவு கட்ட வைத்திலிங்கம் டெல்லி தொடர்பில் உள்ள அந்த ஆடிட்டரை சந்தித்ததாக தகவல்கள் வருகின்றன.
 
ஆடிட்டரை சந்தித்த வைத்திலிங்கம் விரைவில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சொல்லி, சசிகலா பொதுச்செயலாளரும் இல்லை, தினகரன் துணைப் பொதுச்செயலாளருமில்லை என அறிவித்து தினகரனின் ஆட்டத்துக்கு முடிவுகட்ட கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்கியது டெல்லி வரை எதிரொலித்ததாகவும், விரைவில் தினகரனுக்கு செக் வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது நாளாக தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்குகிறது..!

ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான்.. கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments