Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்காமல் தண்ணி காட்டிய சிவசங்கர் பாபா! – டெல்லியில் வளைத்து பிடித்த போலீஸ்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (11:51 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் டேராடூன் விரைந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பி தலைமறைவானதால் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து போலீஸார் சிவசங்கர் பாபாவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீஸார் தற்போது கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்