Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயதாரணி நீங்க கோர்ட்டுக்கு போங்க: நாங்க வழக்கு தொடர தான் செய்வோம்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (15:05 IST)
அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் மீது தமிழக அரசு அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விளவங்கோடு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.


 
 
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு குறித்து அவதூறாக பேசினால் வழக்கு தொடரப்படும். அந்த வழக்குகளை கோர்ட்டில் தான் சந்திக்க வேண்டும். விஜயதாரணி மீது வழக்கு இருப்பதால், அவரது கோரிக்கையை பொது கோரிக்கையாக ஏற்க முடியாது என கூறினார்.
 
மேலும், இது குறித்து பேசிய சபாநாயகர் ப.தனபால், உறுப்பினர்கள் தங்களுக்கான நேரத்தில், ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேச வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை சட்டசபைக்கு கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
 
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் நாகர்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக விஜயதாரணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments