Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் பெண் யானை உயிரிழப்பு - ரேத பரிசோதனை தீவிரம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (14:10 IST)
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.  அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. 
 
இந்நிலையில், ஆனைகட்டி பகுதியில் வன களப்பணியாளர்கள் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி மத்திய சுற்றுக்கு உட்பட்ட தூமனூர் பகுதியில் காப்பு காட்டிற்கு வெளியே, அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதனை தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானை உயிரிழந்த இடத்திற்கு அருகிலேயே மரம் ஒன்றும் வேருடன் முறிந்து விழுந்து உள்ளதால் எவ்வாறு யானை உயிரிழந்திருக்க கூடும் என பிரேத பரிசோதனையில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments